அட்லியிடம் இருந்து தான் இதை கற்று கொண்டேன்.. ஷாருக்கான் பதிவுக்கு அட்லி பதில் என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
’அட்லியிடம் இருந்து தான் இதை நான் கற்றுக் கொண்டேன்’ என ரசிகர் ஒருவர் கேள்விக்கு ஷாருக்கான் பதில் அளித்த நிலையில் அட்லி அதற்கு ’உங்களிடம் இருந்துதான் நான் தினம் தினம் பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ’ஜவான்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது.
இந்நிலையில் சமீபத்தில் மகளிர் ஐபிஎல் போட்டி தொடங்கிய நிலையில் அப்போது ஷாருக்கான் அட்டகாசமான காஸ்ட்யூமில் ஒரு டான்ஸ் ஆடினார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து இந்த புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் ’இந்த ஸ்டைலில் உங்களை அட்லி பார்த்திருந்தால் உங்களை வச்சு இன்னும் பெரிதாக படம் பண்ணி இருப்பார்’ என்று கூற, அதற்கு ’இந்த ஸ்டைலை எனக்கு கற்றுக் கொடுத்ததே அட்லி தான்’ என பதில் கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த அட்லி ’உங்களை பார்த்து தான் சார் நான் தினம் பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். ஷாருக்கான் மற்றும் அட்லியின் இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Sir love u sir ❤️
— atlee (@Atlee_dir) February 25, 2024
Forever learning from you sir ❤️ ❤️❤️❤️ https://t.co/80wFoqf6ba
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com