இந்திய அணியில் மற்றொரு தமிழக வீரரா? ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணிவீரர்கள் பட்டியலில் தமிழக வீரர் ஷாருக்கான் பெயரை இணைப்பதற்கு பிசிசிஐ பரிசீலனை செய்துவருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து தமிழகம் சார்பில் இன்னொரு இளம் வீரர் இந்திய அணியில் இடம்பெறுவது குறித்து ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இது முடிந்தவுடன் வரும் ஜனவரி 19 முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருப்பார் என பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஆனால் ரோஹித் சர்மா தற்போது தசைப்பிடிப்பு ஏற்பட்டு பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
அவர் உடல்தகுதி பெற்றுவருவதாகக் கூறப்படும் நிலையில் அவர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இடம்பெறுவார் என்றே பிசிசிஐ சார்பில் கூறப்படுகிறது. இதனால் அவரின் உடற்தகுதிக்காக பிசிசிஐ காத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து வரும் 30, 31 ஆம் தேதிகளில் ஒருநாள் போட்டிகளுக்கான பிளேயிங் லெவன் அணியின் பிசிசிஐ அறிவிக்க இருக்கிறது.
இந்த அணியில் கடந்த 4 வருடங்களாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் அஸ்வின் இடம்பெறுவார் என்றும் சாகலும் இந்த அணியில் இடம்பெறுவார் என்றும் கூறப்படுகிறது. இவர்களைத் தவிர விஜய் ஹசாரே தொடரில் சிறந்து விளங்கும் சில இளம் வீரர்களுக்கு இந்த அணியில் இடம்கிடைக்கும். அந்த வகையில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக இருக்கும் ருத்ரவாஜ் கெயிக்வாட் மற்றும் மத்தியப்பிரதேச அணியில் ஆல்ரவுண்டராக இருந்துவரும் வெங்கடேஸ் ஐயர் இருவரும் அணியில் இடம்பெறுவார்கள் எனக் கருதப்படுகிறது.
மேலும் சையத் முஷ்டாக் தொடர் மற்றும் விஜய் ஹசாரோ தொடரில் அதிரடி காட்டி சிறந்த பினிஷராக இருந்த தமிழக வீரர் ஷாருக்கான தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கான அணிவீரர்களின் பட்டியலில் இடம்பெறுவார் என்றும் அவரது பெயரை பிசிசிஐ பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com