ரகசியமாக ஐதராபாத் வந்த அட்லி: என்ன காரணமாக இருக்கும்?
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் அட்லி மற்றும் நடிகர் ஷாருகான் ரகசியமாக ஹைதராபாத் வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லி நடிப்பில் ’ஜவான்’ என்ற படம் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடத்த படக்குழுவினர் முடிவு செய்த நிலையில் ஷாருக்கான் மற்றும் அட்லி ஆகியோர் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வருகை தந்தனர். இருவருமே முகத்தில் மாஸ்க் அணிந்து தலையில் தொப்பி அணிந்து முகத்தை முழுதுமாக மறைத்து ரகசியமாக சென்றது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது
ரசிகர்கள் தங்களை அடையாளம் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக தங்களது முகத்தை முழுவதுமாக மூடி மறைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இருவரையும் அடையாளம் கண்டுகொண்ட சில ரசிகர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்
[Video]: King #ShahRukhKhan clicked in Hyderabad with director #Atlee ??@iamsrk#Jawan #SRK #TeamShahRukhKhan pic.twitter.com/6eNSk3jHnA
— Team Shah Rukh Khan ⚡️ (@teamsrkfc) June 14, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments