விஜய்யுடன் நடிப்பது குறித்து கூலான பதில் அளித்த ஷாருக்கான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யுடன் நடிப்பது குறித்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூறிய கூலான பதில் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் ஷாருக்கான் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது விஜய் ரசிகர் ஒருவர், ‘நீங்களும் விஜய் அவர்களும் இணைந்து இருந்த புகைப்படத்தை பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசை படுகிறோம். அது எப்போது நடக்கும்? என்று கேட்டார்.
‘உண்மையில் விஜய் அவர்கள் ரொம்ப கூலான ஒரு நபர். அவருடன் நடிப்பதில் நானும் விருப்பமாக இருக்கிறேன். தகுந்த நேரம் வரும் போது இருவரும் இணைந்து நடிப்போம் என்று தெரிவித்துள்ளார். இந்த பதில் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ என்ற திரைப்படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் குறித்து இதுவரை ஷாருக்கான் எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.
மேலும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தில் ஷாருக்கான் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
He is really cool guy…films happen when they happen so…if they have to they will. https://t.co/me3xGJmZoC
— Shah Rukh Khan (@iamsrk) November 5, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments