ரூ.1000 கோடி வசூலை எட்டிய 'பதான்'.. இதற்கு முன் 1000 கோடி வசூலித்த படங்கள் என்னென்ன?

  • IndiaGlitz, [Tuesday,February 21 2023]

ஷாருக்கான் நடித்த ‘பதான்’ திரைப்படம் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியான நிலையில் ஒரே மாதத்தில் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடி என்ற வசூல் சாதனையை எட்டியுள்ளது

கடந்த சில மாதங்களாக பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகர்களின் படங்கள் தோல்வி அடைந்து வரும் நிலையில் ‘பதான்’ திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்திருப்பது பாலிவுட் திரை உலகினர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது

‘பதான்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் சில சர்ச்சைகள் ஏற்பட்டாலும் இந்த படம் வெளியான பின்னர் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினார்கள் என்பதும் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தற்போது ரூ.1000 கோடி வசூல் என்ற மைல் கல்லை எட்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே இந்தியாவில் ரூ.1000 கோடி வசூல் செய்த படங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம் அமீர்கான் நடித்த 'டங்கல்’ என்ற திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் சுமார் ரூ.1968 கோடி வசூல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனை அடுத்து எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான ’பாகுபலி 2’ என்ற திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் ரூ.1810 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் எஸ் எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான அடுத்த திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்’ என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் ரூ.1200 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் யாரும் எதிர்பாராத வகையில் யாஷ் நடித்த ’கேஜிஎப் 2’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பது இந்த படம் உலகம் முழுவதும் ரூ.1250 கோடி வசூல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுவரை இந்தியாவில் 'பதான்’ உள்பட 5 திரைப்படங்கள் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளதை அடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் இனி அதிகம் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

மகன் அமீனுடன் நடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்.. விறுவிறுப்பான படப்பிடிப்பு..!

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் தனது மகன் அமீன் உடன் நடிக்கும் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகவும் விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில்

ஜெயம் ரவியின் 'அகிலன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

நடிகர் ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான 'அகிலன்' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. 

காதல் மனைவியுடன் சஞ்சு சாம்சன்.. வைரல் புகைப்படங்கள்..!

ஐபிஎல் போட்டிகள் மூலம் பல திறமையான வீரர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர்களின் ஒருவர் சஞ்சு சாம்சன் என்பது தெரிந்தது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் ஆரம்ப காலத்தில் கேரளாவில்

'தீர்க்கதரிசி' திரைப்பட இசை டிரெய்லர் வெளியீட்டு விழா !! 

ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், PG மோகன் - LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் 'தீர்க்கதரிசி

அனுஷ்காவின் சிவராத்திரி வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்: யார் காரணம்?

சிவராத்திரி தினத்தில் அனுஷ்கா ஷெட்டி வழிபட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இதற்கெல்லாம் காரணம் ஆர்யா தான் என கமெண்ட் அளித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.