ஷாருக்கான், விஜய்சேதுபதி, நயன்தாரா: மிரட்டும் 'ஜவான்' புதிய போஸ்டர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அடுத்து வெளியாக இருக்கும் பெரிய படம் ஷாருக்கானின் ‘ஜவான்’ என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் ‘ஜவான்’ படத்தின் புரோமோஷன் பணிகளை அவ்வபோது செய்து வரும் படக்குழுவினர் சற்று முன் அட்டகாசமான புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதி மிரட்டும் வகையில் உள்ள நிலையில் இன்னொரு பக்கம் நயன்தாரா அட்டகாசமாக உள்ளார். இந்த போஸ்டரை பார்க்கும்போது படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அட்லி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் நிச்சயம் ’பதான்’ போலவே மிகப்பெரிய வசூலை அள்ளி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ’ஆர்.ஆர்.ஆர்’, ‘கேஜிஎப் 2’, ‘காந்தாரா’ போன்ற பெரிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வரும் நிலையில் அடுத்த வெற்றி படங்களாக ’ஜெயிலர்’ மற்றும் ’ஜவான்’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Prepare yourself to join the fight! #Jawan releasing worldwide on 7th September 2023, in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/xG2NHdRr2U
— Anirudh Ravichander (@anirudhofficial) August 10, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments