ஷாருக்கான் - அட்லியின் 'ஜவான்' ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றமா? என்ன காரணம்?

  • IndiaGlitz, [Wednesday,March 15 2023]

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜவான்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த படம் வரும் ஜூன் இரண்டாம் தேதி வெளியாகும் என கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் அதனை அடுத்து படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதிக்கு இன்னும் இரண்டரை மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்னும் படப்பிடிப்பே முடியவில்லை என்றும் அது மட்டுமின்றி ஏராளமான கிராபிக் காட்சிகளின் பணிகளும் பெண்டிங் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே திட்டமிட்டபடி ஜூன் இரண்டாம் தேதி இந்த படம் வெளிவர வாய்ப்பு குறைவு என்றும் இதனை அடுத்து இந்த படத்தின்ம் ரிலீஸ் தேதி அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி, யோகி பாபு, மன்சூர் அலிகான், உள்பட பல நடித்த இந்த படத்தில் சஞ்சய் தத் மற்றும் தீபிகா படுகோன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில், ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லி என்டர்டைன்மென்ட் நிறுவனம் ஏராளமான பொருட்செலவில் தயாரித்துள்ளது.