close
Choose your channels

கமல்ஹாசனின் அடுத்த படத்தில் ஷாருக்கான்? மேலும் சில ஆச்சரியங்கள்...!

Wednesday, January 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தில் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு முக்கிய பிரமுகர் அந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் வெளியான செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கமலஹாசன் தற்போது ’இந்தியன் 2’ என்ற படத்தை நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் அடுத்ததாக பா.ரஞ்சித் அல்லது எச் வினோத் இயக்கும் படத்தில் நடிப்பார் என்றும் இதனை அடுத்து மணிரத்னம் படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் 234 வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் குறித்த ஒரு ஆச்சரியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து ஏழு பிரபல நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் இந்த ஏழு பிரபல நடிகர்களும் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள பிரபலங்கள் என்றும் கூறப்படுகிறது.

தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி திரையுலகின் 7 பிரபல ஹீரோக்கள் நடிக்க உள்ள நிலையில் அதில் ஷாருக்கானும் ஒருவர் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசனுடன் ஷாருக்கான் ‘ஹே ராம்’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கமல்ஹாசனுடன் நடிக்கும் 7 ஹீரோக்களுக்கும் சிறப்பு தோற்றம் இல்லை என்றும், அனைவருக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு வருவதாகவும் மொத்தத்தில் இந்த படம் தான் உண்மையான பான் இந்தியா திரைப்படம் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment