தாலிபான்களுக்கு ஆதரவாக பேசிய பிரபல கிரிக்கெட் வீரர்… வச்சுசெய்யும் நெட்டிசன்ஸ்!
- IndiaGlitz, [Tuesday,August 31 2021] Sports News
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி ஆல்ரவுண்டராக விளையாடி வந்தவர் ஷாகித் அஃப்ரிடி. பாக். அணியில் பல ஆண்டுகாலம் நம்பிக்கை நட்சத்திரமாக வலம்வந்த இவர் 27 டெஸ்ட்போட்டி, 398 ஒருநாள் போட்டி, 99 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதோடு பல இளம் வீரர்களுக்கு நல்ல முன்னுதாரணமாக இருந்துள்ளார்.
தற்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தாலிபான்கள் குறித்து கருத்துக் கேட்கப்பட்டது. அதில் “தாலிபான்கள் நல்ல பாசிட்டிவ் மைண்டுடன் ஆட்சிக்கு வந்துள்ளனர். பெண்களை வேலைக்கு செல்ல அனுமதிக்கின்றனர். தாலிபான்கள் கிரிக்கெட்டை நேசிக்கின்றனர்” என்று பதில் கூறியுள்ளார். இந்தப் பதிலைக் கேட்ட நெட்டிசன்கள் தற்போது அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் ஷாகித் அஃப்ரிடியா இப்படி பேசியிருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பெண்களின் உரிமை குறித்து தாலிபான்களிடம் கேள்வி எழுப்பிய போது ஷரியா சட்டத்தின்படி என்ன முடியுமோ? அது பெண்களுக்கு வழங்கப்படும் என்பதில் தாலிபான்கள் உறுதியாக இருக்கின்றனர். இதற்கும் ஒருபடிமேலே போய் பெண்களின் அரசியல் நிலைப்பாடு குறித்து ஒரு தாலிபானிடம் கேள்வி எழுப்பியபோது அவர் சிரித்தபடியே வீடியோ எடுப்பதை நிறுத்த சொன்ன காட்சிகளையும் இணையத்தில் பார்க்க முடிந்தது.
அதோடு ஆப்கனைவிட்டு தப்பிச்செல்ல முயன்ற பொதுமக்களை தடுப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு வெடிகுண்டு வைத்து தகர்த்த காட்சிகளையும் இந்த உலகம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. இப்படி தாலிபான்களின் செயல்பாட்டை இந்த உலகமே விமர்சித்து வரும்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி தாலிபான்களுக்கு ஆதரவாக பதில் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.