அட்லி அலுவலகத்தில் ஷாருக்கான்: அப்ப அது உண்மைதானா?

  • IndiaGlitz, [Wednesday,April 10 2019]

நேற்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் பார்க்க கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் வந்திருந்தார் என்பது போட்டியை பார்த்த அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அவருடைய பக்கத்தில் இயக்குனர் அட்லியும் அவருடைய மனைவியும் போட்டியின் இறுதி வரை உட்கார்ந்திருந்தது தான் இப்போதைய ஹாட் டாக்.

போட்டியின் இடையே அட்லியும், ஷாருக்கானும் அவ்வப்போது பேசிக்கொண்டதை பார்க்கும்போது அட்லியின் 'தளபதி 63' படத்தில் ஷாருக்கான் நடிக்கவிருப்பதாக வெளிவந்த வதந்தி உண்மையாக இருக்குமோ? என்றும் பலர் நினைத்தனர். இதுகுறித்த செய்தியை இன்று காலையில் நாம் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தியின்படி நேற்றைய போட்டி முடிந்ததும் அட்லியின் அலுவலகத்திற்கு ஷாருக்கான் சென்றுள்ளார் என்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அட்லியின் அலுவலகத்திற்கு ஷாருக்கான் சென்றுள்ளார் என்றால் நிச்சயம் இருவரும் ஒரு படத்தில் இணையவுள்ளனர் என்பது தெரிகிறது. 'தளபதி 63' படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளாரா? அல்லது 'மெர்சல்' இந்தி ரீமேக் உருவாகவுள்ளதா? அல்லது புதிய படமா? என்பதை அட்லியே அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை பொறுமை காப்போம்