'தல' தோனியை ஏலத்தில் வாங்க எதையும் விற்க தயார். ஷாருக்கான்
Send us your feedback to audioarticles@vaarta.com
கிரிக்கெட் உலகின் 'தல' தோனி அடுத்த வருடம் முதல் மீண்டும் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே ரசிகர்களும் தோனியை வரவை எதிர்நோக்கி சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சமீபத்தில் பேட்டியளித்த முன்னாள் பிசிசிஐ தலைவர் மற்றும் ஐசிசி சேர்மன் ஸ்ரீனிவாசன் அவர்களும் சென்னைக்கு அணிக்கு மீண்டும் தோனியை கேப்டன் ஆக்குவோம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தோனியை தனது அணிக்காக ஏலம் எடுக்க எனது பைஜாமா உள்பட எதையும் விற்க தயார் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் என்பது தெரிந்ததே.
ஆனால் அதே நேரத்தில் வீரர்களின் பத்து ஆண்டு ஒப்பந்தம் முடிவதால் அடுத்த ஆண்டு அனைத்து அணிகளின் கேப்டன்கள் உள்பட வீரர்கள் அனைவரும் பொது ஏலத்தில் வருவார்கள். எனவே தோனியை தங்கள் அணிக்கு கேப்டனாக்க சென்னை, கொல்கத்தா அணிகள் தவிர மேலும் ஒருசில அணிகள் முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் சென்னை அணிக்கு கோப்பையை வாங்கி கொடுத்த 'தல' தோனி மீண்டும் சென்னை அணிக்கு கேப்டனாக வேண்டும் என்பதே லட்சக்கணக்கான ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com