close
Choose your channels

அமெரிக்க படப்பிடிப்பில் நடிகர் ஷாருக்கானிற்கு விபத்தா? அறுவை சிகிச்சை செய்ததாகத் தகவல்!

Tuesday, July 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சினிமாவில் நடித்து இந்தியா முழுக்கவே பிரபலமாக இருந்துவரும் நட்சத்திர நடிகர் ஷாருக்கானிற்கு மூக்கில் படுகாயம் ஏற்பட்டதை அடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகத் தகவல் கூறப்படுகிறது. இதையடுத்து ரசிகர்கள் பதட்டம் அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்துவரும் ஷாருக்கனின் ‘பதான்’ திரைப்படம் கடந்த ஜனவரியில் வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் ‘ஜவான்’ திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி மற்றும் காமெடி நடிகர் யோகிபாபு, பிரியாமணி எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

‘ஜவான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் இந்தப் படத்தின் டிரெய்லர் ஜுலை 7 அன்று பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுன் ‘மிஷன் இம்பாசிபிள்‘ டிரெய்லருடன் இணைந்து வெளியிடப்படும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு அவருடைய மூக்கில் கடுயைமான காயத்துடன் ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாருக்கிற்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதனால் நடிகர் ஷாருக்கான் மூக்கில் கட்டுப்போட்ட நிலையில் இந்தியா திரும்பியதாக பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் இதுகுறித்து நடிகர் ஷாருக்கனின் தரப்பில் இருந்தோ அல்லது படக்குழு தரப்பில் இருந்தோ எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் ‘ஜவான்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘டுங்கி’ படத்தில் நடிக்க இருக்கிறார். அதில் அவருக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி பண்ணு நடிக்க இருப்பதாகக் கூறப்படும் நிலையில் அவருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படும் தகவல் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில் சினிமா துறையில் தனது 31 வருடத்தை நிறைவு செய்திருக்கும் அவர் பலமுறை இதுபோன்று படப்பிடிப்பில் விபத்தை சந்தித்து இருக்கிறார். அந்த வகையில் கடந்த 2017 இல் ரயீஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பில் முழங்காலில் அடிப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

அடுத்து 2013 இல் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் போது விபத்து ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதேபோல 2009 இல் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை என்று பலமுறை படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் நடிகர் ஷாருக்கானிற்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment