அமெரிக்க படப்பிடிப்பில் நடிகர் ஷாருக்கானிற்கு விபத்தா? அறுவை சிகிச்சை செய்ததாகத் தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,July 04 2023]

பாலிவுட் சினிமாவில் நடித்து இந்தியா முழுக்கவே பிரபலமாக இருந்துவரும் நட்சத்திர நடிகர் ஷாருக்கானிற்கு மூக்கில் படுகாயம் ஏற்பட்டதை அடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகத் தகவல் கூறப்படுகிறது. இதையடுத்து ரசிகர்கள் பதட்டம் அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்துவரும் ஷாருக்கனின் ‘பதான்’ திரைப்படம் கடந்த ஜனவரியில் வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் ‘ஜவான்’ திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி மற்றும் காமெடி நடிகர் யோகிபாபு, பிரியாமணி எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

‘ஜவான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் இந்தப் படத்தின் டிரெய்லர் ஜுலை 7 அன்று பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுன் ‘மிஷன் இம்பாசிபிள்‘ டிரெய்லருடன் இணைந்து வெளியிடப்படும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு அவருடைய மூக்கில் கடுயைமான காயத்துடன் ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாருக்கிற்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதனால் நடிகர் ஷாருக்கான் மூக்கில் கட்டுப்போட்ட நிலையில் இந்தியா திரும்பியதாக பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் இதுகுறித்து நடிகர் ஷாருக்கனின் தரப்பில் இருந்தோ அல்லது படக்குழு தரப்பில் இருந்தோ எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் ‘ஜவான்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘டுங்கி’ படத்தில் நடிக்க இருக்கிறார். அதில் அவருக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி பண்ணு நடிக்க இருப்பதாகக் கூறப்படும் நிலையில் அவருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படும் தகவல் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில் சினிமா துறையில் தனது 31 வருடத்தை நிறைவு செய்திருக்கும் அவர் பலமுறை இதுபோன்று படப்பிடிப்பில் விபத்தை சந்தித்து இருக்கிறார். அந்த வகையில் கடந்த 2017 இல் ரயீஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பில் முழங்காலில் அடிப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

அடுத்து 2013 இல் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் போது விபத்து ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதேபோல 2009 இல் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை என்று பலமுறை படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் நடிகர் ஷாருக்கானிற்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

More News

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான 4 நாட்களில் விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன்: என்ன ஆச்சு?

யூடியூப் மூலம் பிரபலமான TTF வாசன் நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இன்று அவர் விபத்தில் சிக்கியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை

தாத்தாவின் பிறந்த நாளில் சிவகுமாருக்கு நன்றி தெரிவித்த கவுதம் கார்த்திக்..!

பழம்பெரும் நடிகர் முத்துராமன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் பழம்பெரும் நடிகரும் சூர்யா - கார்த்தியின் தந்தையுமான சிவக்குமாருக்கு முத்துராமனின் பேரனும், கார்த்திக்கின்

புதுக்கார் வாங்கிய 'குக் வித் கோமாளி' பிரபலம்.. மனைவி குழந்தைகளுடன் க்யூட் புகைப்படம்..!

விஜய் டிவியில் குறிப்பாக 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் புதிய கார் வாங்கிய நிலையில் தற்போது மேலும் ஒருவர் கார் வாங்கியுள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. 

'PS2' படத்தை அடுத்து 'P2' படம்.. நீண்ட இடைவெளிக்கு பின் களமிறங்கும் தேவா..!

 'பொன்னியின் செல்வன்' பாகம் 2 திரைப்படம் தான் 'PS2' என்ற தலைப்பில் வெளியானது என்பதும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 'PS2' பாடத்தை அடுத்து 'P2' என்ற பெயரில் தற்போது

பப்ஜி காதலனுக்காக 4 குழந்தைகளுக்கு தாய் செய்யக்கூடிய காரியமா இது? அதிர்ச்சி தகவல்!

ஆன்லைனில் பப்ஜி விளையாடும்போது சக போட்டியாளருடன் பழக்கம் ஏற்பட்டு அதனால் இளம்பெண் ஒருவர்