மகளுக்கு வாழ்த்து கூறிய ஷாருக்கான்.. ஏன் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது மகளுக்கு வாழ்த்து கூறிய பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் மற்றும் கௌரி கான் தம்பதியின் மகள் சுஹானா கான் சமீபத்தில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் ஷாருக்கான் மகள் சுஹானா கான் கலந்து கொண்டு பேசிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் ஷாருக்கான் ’மிகவும் அற்புதமாக பேசினீர்கள், நன்றாக ஆடை அணிந்து இருந்தீர்கள், நன்றாக விளம்பரம் செய்தீர்கள், உங்களை நான் நன்றாக வளர்த்துள்ளேன் என்பதில் பெருமை அடைகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ’உங்களது வாழ்த்துக்கள் மிகவும் இனிமையாக இருக்கிறது என்று சுஹானா கான் பதில் கூறியுள்ளார்.
ஷாருக்கான் மகள் சுஹானா கான் நியூயார்க்கில் உயர்கல்வியை முடித்தவர் என்பதும் அவர் தியோடர் கேமினோ இயக்கிய தி கிரே பார்ட் ஆஃப் ப்ளூ என்ற குறும்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் தற்போது ஒரு பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர், அமிதாப்பச்சனின் பேரன் அகஸ்திய நந்தா ஆகியோர்களும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Congratulations on Maybelline beta. Well dressed…well spoken…well done & if I may take some credit well brought up! Love u my Lil Lady In Red!! pic.twitter.com/tLnAQlXoTj
— Shah Rukh Khan (@iamsrk) April 12, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments