close
Choose your channels

சிவகார்த்திகேயனின் அடுத்த பட இசையமைப்பாளர் இவர்தான்!

Friday, March 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவர் தற்போது ரவிகுமார் மற்றும் மித்ரன் ஆகிய இருவரின் இயக்கத்திலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கும் படம் ஒன்றிலும் அவர் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் 'கனா' படத்தை தயாரித்த சிவகார்த்திகேயன் தற்போது 'ரியோராஜ், கலையரசன் நடிப்பில் உருவாகிவரும் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தொழில்நுட்ப பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

சற்றுமுன் சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் இந்த படத்தின் இசையமைப்பாளர் சிங்கப்பூரில் தேசிய விருதினை வென்றவர் என்றும், அவர் யார் என்பதை கண்டுபிடியுங்கள் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை வைத்து பார்க்கும்போது சிங்கப்பூரில் தேசிய விருது வென்ற ஷபீர் தான் இந்த படத்தின் இசையமைப்பாளராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஷபீர் ஏற்கனவே 'சகா', 'நீயா 2', மற்றும் 'தில்லுக்கு துட்டு 2' ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment