மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டை விட்டு செல்வேன்: பிரபல நடிகை கூறியதாக பரபரப்பு!

  • IndiaGlitz, [Saturday,May 11 2019]

பிரதமர் மோடி தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆனால், தான் இந்தியாவை விட்டே சென்றுவிடுவதாக ஐந்து முறை தேசிய விருது பெற்ற நடிகை ஷபனா ஆஸ்மி தெரிவித்ததாக ஒரு வதந்தி பரவி வருகிறது.

இந்த வதந்திக்கு நடிகை ஷபனா ஆஸ்மி தனது சமூக வலைத்தளத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். மோடி மீண்டும் பிரதமர் ஆனால் நான் நாட்டை விட்டு சென்றுவிடுவேன் என்று கூறவே இல்லை என்றும், பொய்யான செய்திகளை பரப்பி வரும் ஒரு கும்பல் இதுபோன்ற ஒரு செய்தியை பரப்பி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் பிறந்தது இந்த நாடு, வாழ்ந்தது இந்த நாடு, இறப்பதும் இந்த நாடாகத்தான் இருக்கும் என்றும் ஷபனா ஆஸ்மி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

68 வயதாகும் நடிகை ஷபனா ஆஸ்மி ஐந்து முறை தேசிய விருதும், ஐந்து முறை பிலிம்பேர் விருதும் பெற்றுள்ளார் என்பதும், தற்போது இவர் இந்தி தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.