வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி'யில் பிரச்சனை செய்யும் நடிகர் ஷாம்

  • IndiaGlitz, [Wednesday,August 09 2017]

இளையதலைமுறை நடிகர்களில் ஒரு படத்தின் கேரக்டருக்காக அதிக ரிஸ்க் எடுத்து மெனக்கிடும் நடிகர்களில் ஒருவர் ஷாம். அதிக உழைப்பை கொட்டி இவர் நடித்த '6' திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் ஷாமின் உழைப்புக்கு பாராட்டு கிடைத்தது.
இந்த நிலையில் தற்போது ஷாம், வெங்கட்பிரபு இயக்கி வரும் 'பார்ட்டி' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் ஒரு ஸ்டைலிஷ் கேங்க்ஸ்டராக நடித்து வருவதாகவும், அஜித்துக்கு 'மங்காத்தா' மூலம் ஒரு மிகப்பெரிய இளைஞர்கள் கூட்டம் ரசிகர்களாக கிடைத்தது போல் இந்த படம் மூலம் தனக்கும் ஒரு திருப்பம் ஏற்படும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இளமையான, ஜாலியான டீம் கொண்ட 'பார்ட்டி' படத்தில் பிரச்சனை பண்ணக்கூடிய, மனதில் பதியக்கூடிய கேரக்டரை தனக்கு கொடுத்த வெங்கட்பிரபுவுக்கு தான் நன்றி கூறி கொள்வதாகவும் ஷாம் கூறியுள்ளார். மேலும் ஒரு திரைப்படம் மக்களை சென்றடைய அந்த படம் ஒரு நல்ல தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்றும் அந்த வகையில் 'பார்ட்டி' படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா அவர்கள் தயாரிப்பது படத்துக்கு கிடைத்த கூடுதல் சிறப்பு என்றும் ஷாம் கூறியுள்ளார்.

More News

துணை கலெக்டர் பதவியை ஏற்றார் பி.வி.சிந்து

கடந்த ஆண்டு நடைபெற்று ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளிப்பதக்கம் பெற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் பி.வி.சிந்து.

தமிழின் பெருமையை உலகுக்கு கொண்டு செல்ல ஜி.வி.பிரகாஷின் முதல் முயற்சி

உலகில் உள்ள 1772 மொழிகளில் 7 மொழிகள் மட்டுமே செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ளது. அந்த ஏழில் ஒன்று தமிழ் மொழி.

சமூக வலைத்தளங்களில் நமீதாவை வறுத்தெடுக்கும் ஓவியா ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களில் ஓவியா தவிர கிட்டத்தட்ட மீதி அனைவருக்குமே கெட்ட பெயர்தான் கிடைத்து வருகிறது.

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ஓவியா? பிக்பாஸ் கொடுத்த வெகுமதி

பத்து படங்களில் நடித்தாலும் பெற முடியாத புகழை ஒருசில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியா பெற்றார் என்பது தெரிந்ததே.

'விவேகம்', 'மெர்சல்', 'வேலைக்காரன்' சாட்டிலைட் உரிமை விபரங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் சாட்டிலைட் டிவிக்களின் நிர்வாகத்தினர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்துவேறுபாடுகள் இருந்த நிலையில் பெரிய ஸ்டார்கள் படங்களின் சாட்டிலைட் உரிமை கூட விற்பனை ஆகாமல் இருந்தது