'பிக்பாஸ் 4' நிகழ்ச்சியில் மேலும் ஒரு கவர்ச்சி நடிகை? தாங்குவார்களா ரசிகர்கள்?

  • IndiaGlitz, [Friday,September 11 2020]

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது கசிந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகை ஒருவர் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது

சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’மிஸ்டர் லோக்கல்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் காமெடி மற்றும் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் கடந்த சில வருடங்களாகவே தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பிக்பாஸ் 3 சீசனிலேயே இவர் போட்டியாளராக கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் அது நடக்காத நிலையில் தற்போது 4வது சீசனில் அவர் போட்டியாளராக பங்கு பெறுவது கிட்டத்தட்ட உறுதி என்று கூறப்படுகிறது

ஏற்கனவே பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கவர்ச்சி நடிகை கிரண் ரத்தோட், சமூக வலைதளங்களில் கவர்ச்சியை கலக்கி வரும் இலக்கியா மற்றும் ஷிவானி நாராயணன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு கவர்ச்சி நடிகை போட்டியாளராக இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த சீசன் முழுக்க முழுக்க கவர்ச்சிகரமாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் தாங்குவார்களா? என்பதும், குடும்பத்துடன் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் பாதிக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கவர்ச்சி நடிகைகளாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது