கொரோனா வைரஸிடம் சண்டைபோடும் பாலிவுட் நடிகை… வைரல் பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு பரவத் துவங்கியபோது எப்படி மக்களைப் பீதியில் வைத்து இருந்ததோ அதேபோல தற்போது இரண்டாவது அலையிலும் மக்கள் மத்தியில் கடும் சலிப்பை உண்டாக்கி இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலினால் பெரும்பாலான தொழில் துறைகள் பாதிக்கப்பட்டு பல நாடுகளின் பொருளாதாரமும் சரிவை சந்தித்து இருக்கிறது.
இந்நிலையில் பாலிவுட்டின் கவர்ச்சி புயல் மல்லிகா ஷெராவத்தும் கொரோனா வைரஸை பார்த்து சலிப்படைந்து இருப்பார் போல. இதனால் தன்னுடைய இன்ஸடா பதிவில் Go away nasty Covid 19 எனப் பதிவிட்டு அத்துடன் ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார். இந்தப் பதிவு சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்று இருக்கிறது.
பாலிவுட் கவர்ச்சி புயலாகக் கருதப்படும் நடிகை மல்லிகா ஷெராவத் இந்தி மட்டுமல்லாது தமிழ், சைனீஷ் மொழிகளிலும் நடித்து உள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “தசாவதாரம்” படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருந்த மல்லிகா ஷெராவத் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார். அடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான “ஒஸ்தி” திரைப்படத்தின் ஒரு பாடலுக்கு இடம்பெற்று இருந்தார்.
தற்போது 10 வருடங்களுக்குப் பிறகு “வெட்டோத்திசுந்தரம்“, “சௌகார் பேட்டை“ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் வடிவுடையான் இயக்கத்தில் எடுக்கப்பட்டு வரும் “பாம்பாட்டம்” திரைப்படத்தில் நடிகை மல்லிகா ஷெராவத் நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸை பார்த்த நாஸ்டி கொரோனாவே போ என நடிகை மல்லிகா ஷெராவத் பதிவிட்டு இருப்பது ரசிகர்களிடையே கவனம் பெற்று இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com