பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 49 ஆண்டு சிறை… தட்டிக் கேட்காத தலைமை ஆசிரியருக்கும்!
Send us your feedback to audioarticles@vaarta.com
புதுக்கோட்டை மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஆசிரியர் ஒருவருக்கு 49 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது அம்மாவட்டத்தின் மகிளா நீதிமன்றம். அதேபோல அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியருக்கு போக்சோ சட்டத்தின் ஒரு பிரிவின் கீழ் 7 ஆண்டு சிறையும் இன்னொரு சட்டப் பிரிவின் கீழ் 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அடுத்த நரியன்புதுப்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றியப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றிய ஆசிரியர் அன்பரசன் (52) அங்கு படித்து வந்த பல மாணவிகளிடம் பாலியல் நோக்கில் தவறாக நடந்து கொண்டார் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி குற்றம் சட்டப்பட்டது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசேகரன் (50) எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து இருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அணுகி இருக்கின்றனர்.
இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் அன்பரசன் மற்றும் ஞானசேகரனை கைது செய்து இதுகுறித்த மனுவை மகிளா நீதிமன்றத்திற்கும் அனுப்பினர். அந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, 3 மாணவிகள் அளித்த சாட்டியத்தின்படி போக்சோ சட்டத்தின் ஒரு பிரிவின் கீழ், வழக்கில் சிக்கிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டு இருக்கிறார். மேலும் பாலியல் அச்சுறுத்தலை வெளியே சொல்ல வேண்டாம் என மாணவிகளை அச்சுறுத்தியக் குற்றத்திற்காக அன்பரசனுக்கு மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
அதேபோல பாதிக்கப்பட்ட 6 மாணவிகள் அளித்த சாட்சியத்தின்படி ஆசிரியர் அன்பரசனுக்கு மேலும் 42 ஆண்டுகள் சிறை தண்டனையும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஏற்கனவே 2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ள நிலையில் மேலும் ஒன்றரை லட்சம் இழப்பீடு வழங்கவும் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. இதனால் 42+7 என ஆசிரியர் அன்பரசன் 49 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க போகிறார். அதேபோல நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் ஞானசேகரன் 7+1 என 9 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com