கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை......! கணவனை கொலை செய்த மனைவி......!
- IndiaGlitz, [Saturday,August 14 2021]
தனது மனைவி கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் அவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த கணவரை, மனைவி கொலை செய்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் அருகே இருக்கும் காளியண்ணன் கவுண்டன் என்ற தோட்டத்தில், தனது தாயுடன் நந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். தங்களுடைய நிலத்தில் விவசாயம் செய்தும், அந்தியூரில் உள்ள தனியார் மில்லில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
பவானி, பெரிய மோளப்பாளையத்தில் வசித்து வருபவர் தான் மைதிலி. இந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் மைதிலிக்கும், நந்தகுமாருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி உள்ளது.
கடந்த மாதம் 31-ஆம் தேதி திடீரென நந்தகுமாருக்கு வயிற்றுவலி ஏற்பட, அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதித்து பார்த்ததில் அவருடைய ரத்தத்தில் விஷம் கலந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேற்படி சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் குமார். மருத்துவர்கள் இதற்குமேல் நந்தகுமாருக்கு சிகிச்சை பலனளிக்காது என்ற கூறப்பட்டதால், மாஜிஸ்திரேட் வரவழைக்கப்பட்டு அவரிடம் மரண வாக்குமூலத்தை பெற்றார். இதன்பின் சென்ற 15-ஆம் தேதி அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.
நந்தகுமார் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
சென்ற மாதம் 28-ஆம் தேதி உணவு சாப்பிடும் போது கசப்பாக இருந்தது. அதன்பின்பு கடுமையான வயிற்றுவலி வந்ததால், மருத்துவமனைக்கு சென்றேன். என்னுடைய மனைவி மீது தான் எனக்கு சந்தேகம் உள்ளது என்று இறுதியாக கூறியுள்ளார்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஆரம்ப கட்டத்தில் உண்மையை கூற மறுத்த மைதிலி, பின்பு விஷம் வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது திருமணமான பின் கடந்த சில நாட்களாகவே 24 மணி நேரமும், இரவு பகல் என பார்க்காமல் என்னை பாலியல் வன்புணர்வு செய்து வந்தார். கொஞ்ச நாட்கள் கழித்து கர்ப்பம் தரித்த பின்பும், என்னை விடாமல் பாலியல் தொந்தரவு செய்தார் அதனால் விஷம் வைத்து கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.
கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட 5 மாத கர்ப்பிணி மைதிலியை, பவானி குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தினர். இதன் பின்பு அப்பெண் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.