உங்களுக்கு வெக்கமா இல்லையா...? மதுவந்தியை சரமாரியாக கேள்வி கேட்ட பெண்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து, டுவிட்டரில் இந்த செய்திதான் ட்ரெண்டிங்கில் உள்ளது.
பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கொந்தளித்து தனது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இப்பள்ளியில் Y.G. மகேந்திரன் அவர்களின் மகள் மதுவந்தி ட்ரஸ்டியாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
ஆனால் ஆசிரியர் விவகாரம் சூடுபிடித்தவுடன், தான் பள்ளியில் டிரஸ்டியாக இல்லை என்பது குறித்து விளக்கமளித்து இருந்தார். இந்த செய்தி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
இதைத்தொடர்ந்து மதுவந்தி கூறியிருப்பது, "நான் பத்ம சேஷாத்ரி பள்ளியில் டிரஸ்டியாக இல்லை, உறுப்பினராகத்தான் உள்ளேன். தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்பதில் உறுதியாக உள்ளேன். நான் படித்த பள்ளியில் இந்த மாதிரி கொச்சையான சம்பவங்களில் ஆசிரியர் ஈடுபட்டதை நினைத்தால் அசிங்கமாக உள்ளது. மற்றபடி பள்ளியின் மாணவியாக இருக்கவோ, கல்வியாளராக இருக்கவோ எனக்கு அசிங்கமும், அவமானமும் இல்லை. இந்துக்களையும், பிராமணர்களையும் தவறுதலாக பேசுவதை என்னால் பொறுக்க முடியாது" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் டுவிட்டர் ஸ்பேஸ் விவாதத்தில் மதுவந்தி, அர்ஜுன் சம்பத் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அந்த விவாதத்தில் மதுவந்திக்கும், அங்குள்ள ஒரு சிலருக்கும் கடுமையான விவாதம் ஏற்பட்டது.
அப்போது மதுவந்தியை எதிர்த்து சரமாரியாக ஒரு பெண் கேள்வி கேட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது,"மதுவந்தி மேடம்.. உங்க பேரை சொல்லவே கூச்சமா இருக்கு.. ஒரு டீச்சர் இப்படி எல்லாம் பண்ணி வெச்சிருக்கார்.. அதையெல்லாம் தட்டி கேட்கிறதை விட்டுட்டு, இங்கே வந்து உட்கார்ந்து பள்ளி நிறுவனங்களை தாக்கி பேசுகிறார்கள் என்று சொல்றீங்களே, உங்களுக்கு வெக்கமாக இல்லையா?" என கேட்டுள்ளார். இந்த உரையாடல்கள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Here's the recording of it. pic.twitter.com/4DM2nMbMX6
— Shri (@shrishrishrii) May 24, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout