கிராம பெண்களை குறி வைத்த தடகள பயிற்சியாளர்....! தொடரும் பாலியல் வன்புணர்வுகள்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது ஏராளாமான பெண்கள், பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார்கள்.
தமிழகத்தில் பிரபல தடகள பயிற்சியாளராக இருந்து வருபவர் தான் நாகராஜன். இவர் சென்னை, பாரிஸ்கார்னரில் பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாதெமி ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். பல முன்னணி வீராங்கனைகளை உருவாக்கிய இவர் மீது, பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
என்னுடைய ஜூனியரான 17 வயதுள்ள பெண், பயிற்சியாளர் செய்த பாலியல் தொல்லைகள் குறித்து என்னிடம் கூறினார். இது குறித்து பத்திரிக்கையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
"கிராமத்து ஏழை பெண்களிடம் குறி வைத்து நாகராஜன் பாலியில் சீண்டல்களை செய்துள்ளார். 16,17 வயதுள்ள பெண்கள் என்றும் பாராமல், அவர்களை தனது இச்சைக்கு இணங்க வைத்துள்ளான் இந்த கொடூரன். அவருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் குரல் கொடுத்தும், எங்களுக்கு போதுமான ஆதரவு கிடைத்ததால், இனி மேல் இதுபோல் நான் செய்யமாட்டேன் என நாகராஜன் உறுதியளித்தார். அதனை அவரை விட்டுவிட்டோம்.
ஆனால் நாகராஜனின் பாலியல் சீண்டல்களுக்கு, உண்டான பெண்கள் மிகச்சிறப்பான அத்லெட்டுகள். இந்த சிக்கலில் மாட்டும் பெண்கள் வேறு அகாதெமிக்கு மாற வேண்டும், இல்லையெனில் விளையாட்டை விட்டே வெளியேறி விட வேண்டும் என்ற சூழலுக்கு உள்ளாகிறார்கள். அதிலும் குறிப்பாக கிராமத்துப்பெண்கள் மற்றும் வறுமையில் வாடும் பெண்களை குறி வைத்து தாக்குகிறான் இந்த பயிற்சியாளர். காரணம் அவர்களால் வெளியில் சொல்லமுடியாது, தங்களை காட்டிக்கொடுக்க மாட்டார்கள் என்பதால் தான்.
நாகராஜன் பல ஏழைப்பெண்களை உடலுறவுக்கு கட்டாயப்படுத்தியதாலும், மாதக்கணக்கில் வைத்து துன்புறுத்தியதாலும், அவர்கள் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒய்எம்சிஏவில் உள்ள அவர் வீட்டில் எனது ஜூனியர் பெண்ணை, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளார். 16 வயதே நிரம்பிய பெண் தான் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததாகவும் என்னிடம் கூறியுள்ளார்.
மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள அலுவலகத்தில், பயிற்சி கொடுக்கும் போது நாகராஜனை பார்த்திருக்கிறேன். பயிற்சி முடித்துவிட்டு, எல்லாப்பெண்களையும் அனுப்பு விடுவார். ஆனால் ஒரு பெண்ணை மட்டும் வற்புறுத்தி தான் சொல்வதையெல்லாம் செய்யச் சொல்வார். அந்தப்பெண் அழுதவாறு என்னிடம் இதை கூறியும் அவருக்கு என்னால் உதவ முடியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் அத்லெட்டின் தந்தை ஒருவர், நாகராஜனின் பாலியல் சீண்டல்கள் குறித்து புகாரளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"Trigger warning: sexual abuse"
— T.N. Raghu (@tnrags) May 26, 2021
Horrific sexual abuse allegations have cropped up against P. Nagarajan, coach at Prime Sports athletic academy in Chennai. Some of his former trainees have testified against him. Please order a thorough investigation. @mkstalin. @CMOTamilnadu 1/n pic.twitter.com/E9R609rzF6
Another former trainee of Nagarajan shared her experience. 4/n@mkstalin @CMOTamilnadu @chennaipolice_ @tnpoliceoffl @KanimozhiDMK @ThamizhachiTh @Udhaystalin @Dayanidhi_Maran @SiddharthPTOI @jon_selvaraj @toi_Arunram @Chinmayi @JenishaRani pic.twitter.com/6fiQcc1p6t
— T.N. Raghu (@tnrags) May 26, 2021
A complaint to the Tamil Nadu Athletic Association from a father of an athlete. 2/n pic.twitter.com/a2w7YzY9Tj
— T.N. Raghu (@tnrags) May 26, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com