நடுரோட்டில் நடிகையின் ஸ்கர்ட்டை பிடித்து இழுத்த மர்ம நபர்கள்: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Tuesday,April 24 2018]

பாலிவுட் நடிகையும் மாடலுமான ஆகாஷ் சர்மா சமீபத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரை பின் தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள் நடுரோட்டில் திடீரென ஆகாஷ் சர்மாவின் ஸ்கர்ட்டை பிடித்து இழுத்து, 'உள்ளே என்ன இருக்கின்றது என்று காட்டு' என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆகாஷ் சர்மா, பேலன்ஸ் தவறி கீழே விழுந்து காயமடைந்தார்.

பட்டப்பகலில் பிசியான சாலையில் நடந்த இந்த சம்பவத்தை யாரும் தட்டி கேட்கவில்லை என்றும், தனக்கு உதவி செய்யக்கூட யாரும் வரவில்லை என்றும் ஆகாஷ் சர்மா தனது டுவிட்டரில் மன வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து தான் காவல்நிலையத்தில் புகார் செய்யவுள்ளதாகவும் இருப்பினும் அந்த மர்ம நபர்கள் பிடிபடுவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்றும் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பத்தால் தனக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்தால் தூக்குதண்டனை உள்பட கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்ற சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ள போதிலும் நாட்டில் ஆங்காங்கே பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.