கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதி கொடுத்த பாலியல் தொழிலாளர்கள்
- IndiaGlitz, [Wednesday,August 22 2018]
கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த வரலாறு காணாத கனமழையால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சேதத்தில் இருந்து அம்மாநில மக்களை மீட்டெடுக்க இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலக நாடுகளில் இருந்தும் நிதியுதவி குவிந்து வருகின்றது
இந்த நிலையில் அகமதாபாத் பகுதியை சேர்ந்த பாலியல் தொழிலாளிகள் ரூ.21 ஆயிரம் கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி இம்மாத இறுதிக்குள் மேலும் ஒரு லட்ச ரூபாய் நிதிவழங்கவுள்ளதாக அவர்கள் வாக்குறுதி கொடுத்துள்ளனர்.
இந்த பகுதியில் உள்ள பாலியல் தொழிலாளிகளின் நலனுக்காக கடந்த 30 வருடங்களாக போராடி வரும் சினேஜியோத் என்பவர் இதுகுறித்து கூறியபோது, 'சென்னை வெள்ளம் உள்பட பல தேசிய பேரிடர்களின்போது எங்களால் முடிந்த அளவு நிதியுதவி செய்துள்ளோம்.
இதுவரை பல்வேறு மாநிலங்களுக்கு ரூ.27 லட்சம் வரை நிதியுதவி செய்துள்ளதாகவும், அவற்றில் காஷ்மீர், குஜராத் பூகம்பம், கார்கில் போர் ஆகியவைகளும் அடங்கும் என்றும் கூறியுள்ளார்.