கொரோனா எதிரொலி: மாற்று வழியில் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் பாலியல் தொழிலாளிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால் தினக்கூலி தொழிலாளர்கள் முதல் தொழிலதிபர்க்ள் வரை பலரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாலியல் தொழிலாளிகளின் நிலைமை படுமோசமாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக ஒருவரை ஒருவர் கை குலுக்க கூடாது என்ற நிபந்தனை பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாலியல் தொழில் என்பது சாத்தியமே இல்லை என்ற நிலைதான் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் பாலியல் தொழிலாளிகள் தங்கள் வருமானத்திற்காக மாற்று வழியை தேடியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து பாலியல் தொழிலாளி ஒருவர் கூறியபோது ’ஊரடங்கு காலத்தில் தனிமையில் இருப்பவர்களுக்கு பாலியல் தேவை இருந்தாலும் அதை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் மாற்று வழி ஒன்றை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். இதன்படி வீடியோ கால் மூலமாக பாலியல் தேவைகளை வாடிக்கையாளர்களுக்கு பூர்த்தி செய்து வருகிறோம். மொபைல் போன் மற்றும் இணைய இணைப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் வீடியோ கால் மூலம் பேசுகிறோம். அவர்களது பாலியல் தேவையை முழுவதுமாக வீடியோ காலில் பூர்த்தி செய்துவிட முடியாது என்றாலும் இரட்டை அர்த்தங்களில் பேசுவது, அதிக நேரங்கள் ஜாலியாக பேசுவது ஆகியவற்றால் ஓரளவுக்கு பூர்த்தி செய்கிறோம். இதனால் வாடிக்கையாளர்கள் திருப்தி அடைந்து எங்களுக்கு கூகுள்பே மூலம் பணம் அனுப்புகின்றனர். இதன்மூலம் எங்களுக்கு ஓரளவு பணம் கிடைப்பதால் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடிகிறது என்று கூறியுள்ளார்
கொரோனா பிரச்சனை முடியும் வரை இந்த மாற்று வழி மூலம் பணம் சம்பாதித்து வருவதாகவும் இருப்பினும் இந்த உரையாடல்களை ஒரு சிலர் ரெக்கார்டிங் செய்து வருவதால் பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதாகவும் பாலியல் தொழிலாளர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com