விருப்பத்துடன் உடலுறவு… பின்பு கற்பழிப்பு மனு போட்ட பெண்ணின் வழக்கில் முக்கிய தீர்ப்பு!

  • IndiaGlitz, [Saturday,July 08 2023]

ஒரு ஆணும் பெண்ணும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்துவிட்டு இருவரும் உடலுறவு வைத்துக்கொண்ட பின்பு அந்த வாக்குறுதியை ஆண் நிறைவேற்றாமல் விட்டுவிட்டார். இந்நிலையில் அந்த இளம்பெண் தன்னுடைய காதலர்மீது பாலியல் பலாத்கார வழக்குத் தொடுத்துள்ளார். அந்த வழக்கின் மீதான முக்கிய தீர்ப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஒடிசா மாநிலத்திலுள்ள புவனேஸ்வர் பகுதியில் வசித்துவரும் இளைஞர் ஒருவர், பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் நெருக்கமாக காதலித்து வந்த நிலையில் அந்த ஆண் திருமணம் செய்துகொள்கிறேன் என்று வாக்குறுதியும் அளித்திருக்கிறார். இந்த ஒப்பந்தத்தின் பேரில் இருவரும் விருப்பத்துடன் உடலுறவு வைத்துக் கொண்டுள்ளார்.

ஆனால் உடலுறவுக்குப் பின்பு அந்த ஆண் ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் விட்டிருக்கிறார். இதையடுத்து திருமணம் செய்துகொள்வதாக பொய்யான வாக்குறுதியை அளித்துவிட்டு தன்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று அந்த ஆண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருகிறது.

இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அதுகுறித்த தீர்ப்பை இன்று நீதிபதி ஆர்.கே.பட்நாயக் வெளியிட்டுள்ளார். அதில் திருமணம் செய்துகொள்வதாக உறுதிமொழி அளிக்கப்பட்டு அந்த அடிப்படையில் ஒருமித்த உடலுறவு ஏற்பட்டு பின்னர் வேறு சில காரணங்களால் அதே உறுதிமொழி நிறைவேற்றப்பட முடியாமல் போனால் அந்த உடலுறவை பலாத்காரமாக கருதமுடியாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் அந்த இளைஞர் மீதான மற்ற மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் காதலித்து வந்த இருவர் பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தங்களது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போவதற்கும் உண்மையிலேயே திருமணம் செய்துகொள்வதாக அளிக்கின்றன மற்ற பொய்யான வாக்குறுதிக்கும் ஒரு நுட்பமான வித்தியாசம் இருக்கிறது என்று நீதிபதி சுட்டிகாட்டியுள்ளார்.

இதனால் இந்த வழக்கில் பாலியல் நெருக்கம் காட்டப்பட்டு இருப்பதை மட்டுமே வைத்துக்கொண்டு ஐ.பி.சி செஷன் 376 இன் கீழ் கற்பழிப்பு குற்றமாக கருத முடியாது. அதே வேளையில் பொய்யான வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு தவறான நோக்கத்தில் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு இருந்தால் கற்பழிப்பு குற்றமாக எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி இருவரும் உடல் ரீதியாக உறவு ஏற்படுத்திக் கொண்டாலும் சில நேரங்களில் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போகலாம். இதனால் அந்த ஆண் உண்மையிலேயே வாக்குறுதியை மீறியதாக கூற முடியாது.

இந்த அடிப்படைகளை வைத்துக்கொண்டு உடலுறவை பாலியல் பலாத்காரமாக கருத முடியாது என்று உத்தரவிட்டுள்ளார். நட்பாக இருந்தபோது நடந்த உறவுநிலை கசப்பாக மாறும்போது அவநம்பிக்கையாக எடுத்துக்கொண்டு கற்பழிப்பு குற்றம் சாட்டக்கூடாது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கனமான கேரக்டரில் நடித்து இதயத்தை நிரப்பிய நடிகை ரேவதி… அழகான திரைப்பயணம்

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக பல திரைப்படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்திய நடிகை ரேவதிக்கு இன்று பிறந்தநாள்.

இளம் நடிகருக்கு கால் முறிவு… கிண்டல் செய்து பிக்பாஸ் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருந்துவரும் நடிகர் ஒருவர் விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு தற்போது வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில்

$100 மில்லியன் பட்ஜெட் படம்.. ஒரு கிராபிக்ஸ் காட்சி கூட இல்லை: ஜூலை 21ல் ரிலீஸ்..!

 100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்டு வரும் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகிய 'OPPENHEIMER'  என்ற படத்தில் ஒரு கிராபிக்ஸ்

'ஜெயிலருக்கு அடுத்த படத்தில் 3 உச்ச நட்சத்திரங்கள்.. ஜாக்பாட் அடித்த நெல்சன்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நெல்சன் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ள நிலையில் அதில் தமிழ் திரை உலகின் மூன்று உச்ச நட்சத்திரங்க

பட பூஜையே போடல, அதற்குள் இத்தனை கோடி வியாபாரமா? கமல்-எச் வினோத் படத்தின் சாதனை..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'கமல் 233' என்ற படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். இருப்பினும் இந்த படத்தின் பூஜை கூட போடாத