பீச்சில் உடலுறவு கூடாது… கடுமையாக எச்சரிக்கும் அளவிற்கு வைரலான சம்பவம்!

  • IndiaGlitz, [Tuesday,June 13 2023]

ஐரோப்பிய நாடுகளில் ஒனறான நெதர்லாந்தில் ஒரு நகரத்தை ஒட்டியுள்ள கடற்கரைக்கு செல்லும் ஜோடிகள் உடலுறவில் ஈடுபடக் கூடாது, மீறினால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்று கூறும் அளவிற்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. இந்தத் தகவல்தான் தற்போது சோஷியல் மீடியாவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மேற்கத்திய நாடுகளில் தங்களது குழந்தை மற்றும் குடும்பத்தினரோடு ஒன்றாகக் கடற்கரைக்குச் சென்று சன்பாத் (சூரிய குளியல்) எடுப்பதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். இதுபோன்ற சமயங்களில் ஆண், பெண் இருபாலருமே கவர்ச்சியான உடைகளில் இருப்பதை யாரும் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் சூரியக் குளியலுக்கு வரும் சில ஜோடிகள் தவறான நடத்தையில் ஈடுபடும்போது சில சமயங்களில் பிரச்சனைகள் எழத்தான் செய்கிறது.

அந்த வகையில் நெதர்லாந்திலுள்ள வீரே எனும் கடற்கரை நகருக்கு வரும் சில ஜோடிகள் தகாத முறைகளில் நடந்து கொள்வதைத் தொடர்ந்து அந்த நகரத்தின் அதிகாரிகள் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை புகுத்தி வருகின்றனர். அதிலும் வீரே நகரத்தின் கடற்கரைக்கு அருகில் இருக்கும் மலை குன்று பகுதிகளில் காதல் ஜோடிகள் உடலுறவு மேற்கொள்வதாகவும் இதனால் கடற்கரைக்கு வரும் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுவதாகவும் கடுமையான புகார் வைக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து முதலில் எச்சரிக்கை பேனர்களை வைத்து கண்காணித்துவந்த அதிகாரிகள் நிலைமை மோசம் அடைந்ததால் தற்போது கண்காணிப்புக்கு வேலை ஆட்களை வைத்துள்ளதாகவும் கட்டுப்பாடுகளை மீறும் ஜோடிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என்றும் தகவல் வெளியிட்டு இருப்பது பலரது மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.

இந்நிலையில் தகாத நடத்தை குறித்து எச்சரிக்கை விட்டிருக்கும் அந்நகரத்தன் மேயர் நிர்வாணமாக உடை அணிவதற்கு தடையில்லை என்பதையும் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.