குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம்: யூனிசெப் தூதர் த்ரிஷா கருத்து

  • IndiaGlitz, [Monday,November 20 2017]

 

யூனிசெப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம் செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இதுகுறித்த நிகழ்ச்சி ஒன்று இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா, யூனிசெப் அமைப்பின் தமிழகம், கேரளம் தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை த்ரிஷா, 'குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்று கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த த்ரிஷா கூறியதாவது:

குழந்தைகள் பள்ளிக்கு ஜாலியாக செல்லும் வகையில் பள்ளியில் அமைப்புகள் இருக்க வேண்டும். பள்ளி செல்வதே போர் என்று பல குழந்தைகள் கருதும் வகையில் பள்ளிகள் இருக்க கூடாது. குழந்தைகளுக்கு கல்வி மட்டுமின்றி விளையாட்டு, புத்தகம் படிக்கும் திறன் ஆகியவற்றை வளர்க்க  வேண்டும். குறிப்பாக பாலியல் கல்வி ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியம்

பல பள்ளிகளில் நூலகம் இருந்தாலும் புத்தகத்தின் பாதுகாப்பு கருதி குழந்தைகளிடம் தருவதில்லை. இதுபோன்றவைகள் மாற வேண்டும். குழந்தைகள் அதிகம் படித்தால் அறிவு விரிவடையும். சினிமாவில் காண்பது எல்லாமே உண்மையல்ல. சுவாரசியத்திற்காக ஃபேண்டஸி சினிமாவில் கலப்பதுண்டு. இவற்றில் எது நிஜம், எது ஃபேண்டஸி என்பதை அறிய கல்வியறிவு அவசியம்' என்று கூறினார்

More News

'தீரன்' படத்தை திருட்டு இணையதளத்தில் பாருங்கள்: தயாரிப்பாளரின் தைரியமான பதில்

கார்த்தி, ராகுல் ப்ரித்திசிங் நடிப்பில் வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் கார்த்தியின் பெஸ்ட் படமாக அமைந்திருக்கும் நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் - பொன்ராம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'வேலைக்காரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.

'தல'யின் 'தலைவி ஷாலினி அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தல அஜித்தின் தலைவியும், நடிகையுமான ஷாலினி அஜித் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் IndiaGlitz அவருக்கு உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

குற்றவாளிகள் நாடாளக்கூடாது! டுவிட்டரில் பொங்கிய கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக டுவிட்டரில் மட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகளிலும், பொதுமக்கள் முன்னிலையிலும் சமூக விழிப்புணர்வுகளுக்கான புரட்சிகரமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

த்ரிஷாவுக்கு யூனிசெப் அமைப்பு கொடுத்த மிகப்பெரிய கெளரவம்

நடிகை த்ரிஷா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.