குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம்: யூனிசெப் தூதர் த்ரிஷா கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
யூனிசெப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம் செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இதுகுறித்த நிகழ்ச்சி ஒன்று இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா, யூனிசெப் அமைப்பின் தமிழகம், கேரளம் தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை த்ரிஷா, 'குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்று கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த த்ரிஷா கூறியதாவது:
குழந்தைகள் பள்ளிக்கு ஜாலியாக செல்லும் வகையில் பள்ளியில் அமைப்புகள் இருக்க வேண்டும். பள்ளி செல்வதே போர் என்று பல குழந்தைகள் கருதும் வகையில் பள்ளிகள் இருக்க கூடாது. குழந்தைகளுக்கு கல்வி மட்டுமின்றி விளையாட்டு, புத்தகம் படிக்கும் திறன் ஆகியவற்றை வளர்க்க வேண்டும். குறிப்பாக பாலியல் கல்வி ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியம்
பல பள்ளிகளில் நூலகம் இருந்தாலும் புத்தகத்தின் பாதுகாப்பு கருதி குழந்தைகளிடம் தருவதில்லை. இதுபோன்றவைகள் மாற வேண்டும். குழந்தைகள் அதிகம் படித்தால் அறிவு விரிவடையும். சினிமாவில் காண்பது எல்லாமே உண்மையல்ல. சுவாரசியத்திற்காக ஃபேண்டஸி சினிமாவில் கலப்பதுண்டு. இவற்றில் எது நிஜம், எது ஃபேண்டஸி என்பதை அறிய கல்வியறிவு அவசியம்' என்று கூறினார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout