1,000 பெண்கள் புடைசூழ இருக்கும் சாமியாருக்கு 1,000 ஆண்டுகள் சிறை தண்டனை!!! வைரல் சம்பவம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
துருக்கி நாட்டின் மதத்தலைவர் ஒருவருக்கு இஸ்தான்புல் நீதிமன்றம் அதிரடியாக 1,075 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது. காரணம் இவருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தோழிகள் இருப்பதாகப் பெருமை பேசிக் கொள்வதோடு பல்வேறு பாலியல் சம்பவங்களில் தொடர்பு உடையவராகவும் இருந்து வருகிறார். அதோடு தன்னை ஒரு “அசாதாரணமான சக்தி வாய்ந்தவன்” என்றும் “பெண்களுக்காக என் இதயத்தில் அன்பு நிரம்பி வழிகிறது. அன்பு ஒரு மனித குணம். இது ஒரு முஸ்லீமின் தரம்” என்றும் தாறுமாறான கொள்கைகளோடு வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இவரைச் சுற்றி எப்போதும் பெண்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டே இருக்கிறது. அந்தப் பெண்களில் பெரும்பாலானோர் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களாக இருக்கின்றனர். அந்தக் கூட்டத்தை அவர் “பூனைக்குட்டிகள்” என்றே அன்போடு அழைக்கிறார். இவருடைய மத நிறுவனத்தில் விசாரணை செய்த போலீசார் 69,000 கருத்தடை மாத்திரைகளைக் கைப்பற்றி உள்ளனர். மேலும் இவரைக் குறித்து சாட்சியம் அளித்த பல பெண்கள் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தினார் என்றும் வலுக்கட்டாயமாக கருத்தடை மாத்திரைகளை கொடுத்தார் என்றும் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தி இருக்கின்றனர்.
இப்படி அடுக்கடுக்கான குற்றங்களை சுமந்து கொண்டிருக்கும் அட்னன் ஒக்டர் எனும் சாமியாருக்கு இஸ்தான்புல் நீதிமன்றம் 1,075 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சிலர் உலகிலேயே இப்படி ஒரு சிறை தண்டனை இதற்குமுன் எப்போதும் வழங்கப்பட்டதே இல்லை என்றே குறிப்பிட்டு உள்ளனர். பாலியல் வன்கொடுமை குற்றங்களைத் தவிர மோசடி வழக்கு, குற்றவியல் வழக்கு மற்றும் சிறார்களை துன்புறுத்திய வழக்கு எனப் பல்வேறு வழங்குகளில் இந்த சாமியார் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 1990 முதல் அட்னன் ஒக்டர் மத அமைப்பு எனும் பெயரில் நிறுவனம் நடத்தி வரும் இவர் பல முறைகேடு வழக்குகளில் சிக்கி இருக்கிறார். அதோடு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் A9 television என்ற பெயரில் பெண்களோடு இவர் நடத்தும் பல நிகழ்ச்சிகள் பார்ப்போரை முகம் சுளிக்கும் ரகத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இவர் பழமைவாதத்தில் ஊறின கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பி வந்ததாகவும் அதோடு டாவின்சியின் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை இவர் ஏற்றுக் கொள்ளாதவர் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout