போதைப்பொருட்களுடன் உல்லாச பார்ட்டி: பிரபல நடிகரின் மகள் கைதா?
Send us your feedback to audioarticles@vaarta.com
போதைப் பொருட்களுடன் உல்லாச பார்ட்டி நடத்தியதாக பிரபல நடிகரின் மகள், காவல்துறை அதிகாரியின் மகள், எம்பியின் மகன் உள்பட ஒரு சில முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஐதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் போதைப் பொருட்களுடன் உல்லாச பார்ட்டி நடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அந்த ஓட்டலை முற்றுகையிட்ட போது பிரபல தெலுங்கு நடிகரும், நடிகர் சிரஞ்சீவியின் சகோதரருமான நாகபாபுவின் மகள் உள்பட 150 பேர்களிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பின் அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும், ரத்த பரிசோதனையின் முடிவுக்கு பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தால் யாரும் தப்ப முடியாது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்,
மேலும் இந்த பார்ட்டி நடந்த இடத்தில் கோகைன் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து விடுதியின் உரிமையாளர்கள் மேலாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் நடிகர் நாகபாபு இதுகுறித்து விளக்கமளித்தபோது, எனது மகள் நிகாரிகா சம்பந்தப்பட்ட பப்புக்கு சென்றது உண்மைதான் என்றும் ஆனால் அதே நேரத்தில் அவர் போதை பொருள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும் போலீசாரின் முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்
#NiharikaKonidela Released from police custody
— TFI Movie Buzz (@TFIMovieBuzz) April 3, 2022
Banjara Hills CI Siva Chandran Suspended#TollywoodDrugs #Drugs pic.twitter.com/eXK8GAxi7s
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com