விஜய்யின் 'மாஸ்டர்' படத்தை வாங்கிய விக்ரம் பட தயாரிப்பாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் 64 வது படமான ;மாஸ்டர்; திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் ஏற்கனவே ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம்
‘மாஸ்டர்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவிக்கும், டிஜிட்டல் அமேசான் நிறுவனத்திற்கும், ஆடியோ உரிமையை சோனி நிறுவனத்திற்கும் ஏற்கனவே விற்பனை செய்தாகிவிட்டது என்பது தெரிந்ததே. அதேபோல் ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உரிமைகளும் விறுவிறுப்பாக விற்பனையாகி விட்டது இதனிடையில் ‘மாஸ்டர்’ படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் நிறுவனம் யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் லலிதகுமார் இந்த படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் உரிமையை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம், லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தான் ‘மாஸ்டர்’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
லலித்குமார் ஏற்கனவே விக்ரம் நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கி வரும் திரைப்படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மாஸ்டர்’ படத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய உள்ளதாக ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments