கர்நாடகாவில் பயங்கர விபத்து.....! திமுக எம்.எல்.ஏ. மகனுடன் 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
கர்நாடக பகுதியில் அதிவேகமாக கார் சென்றுகொண்டிருக்கும் போது, கட்டுப்பாட்டை இழந்ததில் ஆடி காரில் பயணித்த 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
ஓசூர் சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏ-வாகவும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மேற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருப்பவர் தான் ஒய்.பிரகாஷ். இவரது மகன் கருணா 24 வயது நிரம்பியவர். இவருடன் 6 பேர் ஆடி காரில், கர்நாடக மாநிலம் கோரமங்களா அருகே பயணம் செய்துள்ளனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பின் மீது மோதி, அருகில் உள்ள கட்டிடத்தின் மீது மோதியது. இதில் கருணா, 3 பெண்கள் உட்பட, அவருடன் பயணித்த 7 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். இக்கோர விபத்து குறித்து அம்மாநில ஆடுகோடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
முதல்கட்ட விசாரணையில் காரை அதிவேகமாக ஓட்டியதால் தான், விபத்து நடந்துள்ளது என்பதை போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் இறந்தவர்களின் சடலங்கள் பெங்களூர் செய்ன்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments