செப்டம்பர் 23ல் வெளியாகும் 7 திரைப்படங்கள்: முழு விபரங்கள்!

  • IndiaGlitz, [Monday,September 19 2022]

ஒவ்வொரு வாரமும் குறைந்தது நான்கு திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் செப்டம்பர் 23ஆம் தேதி 7 திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

செப்டம்பர் 30ஆம் தேதி மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ வெளியாக உள்ளது. அதற்கு முந்தைய நாள் அதாவது செப்டம்பர் 29ஆம் தேதி தனுஷ் நடித்த ’நானே வருவேன்’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை அதாவது செப்டம்பர் 23ஆம் தேதி 7 திரைப்படங்கள் வெளியாக உள்ளது என்பதும் அனைத்துமே சின்ன பட்ஜெட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

’ஆதார்’: கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் அருண்பாண்டியன், மனிஷா யாதவ், ரித்விகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த் தேவா இசையில், மனோ நாராயணன் ஒளிப்பதிவில், ஜான் பிரிட்டோ படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

’பபூன்’: கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இயக்குனர் அசோக் வீரப்பன் என்பவர் இயக்கிய இந்த படத்தின் முக்கிய வேடத்தில் வைபவ் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் என்பவர் ஒளிப்பதிவும், குமார் தங்கப்பன் என்பவர் கலை இயக்கமும், வெற்றி கிருஷ்ணன் என்பவர் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். இந்த படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்பு உள்ளது.

’ரெண்டகம்’: அரவிந்த்சாமி நடிப்பில் ஃபெல்லினி என்பவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெண்டகம்’ திரைப்படத்தில் குஞ்சாக்கோ போபன், ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடித்துள்ளனர். கௌதம் சங்கர் ஒளிப்பதிவில், அப்பு என். பட்டதாரி படத்தொகுப்பில் அருள்ராஜ் கென்னடி இசையில் உருவாகிய இந்த படம் அரவிந்த்சாமியின் வெற்றி படங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

’ட்ரிக’ர்: அதர்வா, தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் அருண்பாண்டியன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். திலிப் சுப்பராயனின் ஸ்டண்ட் காட்சிகள் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிவி பிரகாஷ் நடித்த ’டார்லிங்’ உட்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ’இரும்புத்திரை’ இயக்குனர் பிஎஸ் மித்ரன் வசனம் எழுதி இருக்கிறார் என்பதும், இந்த படமும் ஓரளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட நான்கு திரைப்படங்கள் தவிர ’ட்ராமா’, ’கெத்துல’, ’குழலி’ ஆகிய திரைப்படங்களும் செப்டம்பர் 23ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

More News

3 நாட்களுக்கு பின்னரே திரைப்பட விமர்சனம்: தயாரிப்பாளர் சங்க தீர்மானம் சாத்தியமாகுமா?

நேற்று தயாரிப்பாளர் சங்க கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் மூன்று நாட்களுக்கு பின்னர் தான் திரைப்பட விமர்சனம் வெளியிட வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலேசியாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசைநிகழ்ச்சி: டிக்கெட் விற்பனையில் சாதனை!

இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் உலகம் முழுவதும் சுற்றி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏஆர் ரகுமான் கனடாவில் இசை நிகழ்ச்சி

தனுஷின் 'வாத்தி' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தனுஷ் நடித்த 'நானே வருவேன்' திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் நடித்த இன்னொரு திரைப்படமான 'வாத்தி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி

பிரபல இயக்குனர்களின் கனவு படங்களில் சூர்யா: ஆச்சரிய ஒற்றுமை!

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களின் கனவு படங்கள் அனைத்திலும் சூர்யா நாயகனாக நடித்து வரும் ஆச்சரியமான ஒற்றுமை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 

'வெந்து தணிந்தது காடு: பார்ட் 2 குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன மாஸ் தகவல்

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கிய 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றும் முதல் நாளில் பத்து கோடிக்கு மேல் வசூல் செய்த இந்தப் படம்