சென்னை உள்பட 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

  • IndiaGlitz, [Thursday,November 18 2021]

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கனமழை காரணமாக தொடர்ச்சியாக பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் இன்றும்கூட பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கனமழை நாளையும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்த நிலையில் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.