லோகேஷ் கனகராஜ் உடன் பணியாற்றிய 7 இயக்குனர்கள்: 'லியோ' படத்தின் ஆச்சரிய தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள நிலையில் இந்த படத்தில் 7 இயக்குனர்கள் பணி புரிந்துள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே இந்த படத்தில் மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான் ஆகிய ஐந்து இயக்குனர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அதேபோல் இந்த படத்தின் திரைக்கதை அமைக்க ரத்தினகுமார் தீரஜ் வைத்தி ஆகிய இரண்டு இயக்குனர்கள் உதவி செய்துள்ளனர். இதை வைத்து பார்க்கும்போது இந்த படத்தில் 7 இயக்குனர்கள் நடிகர்களாகவும் தொழில்நுட்ப பணியில் பணிபுரிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ராசு மதுரவன் இயக்கிய ’மாயாண்டி குடும்பத்தார்’ என்ற திரைப்படத்தில் மணிவண்ணன், பொன்வண்ணன், சீமான், ஜெகன்நாத், தருண் கோபி, ஜி எம் குமார், ரவி மரியா, சிங்கம் புலி, ராஜ்கபூர், நந்தா பெரியசாமி ஆகிய 10 இயக்குனர்கள் பணிபுரிந்த நிலையில் தற்போது ‘லியோ’ திரைப்படத்தில் 7 இயக்குனர்கள் பணி புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகும் 'லியோ’ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments