ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியால் பாதிப்பா??? 5 கோடி நஷ்டஈடு கேட்ட சென்னை நபர்… சீரம் நிறுவனத்தின் பதில்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் இரண்டும் இணைந்து தயாரித்த கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி நல்ல பலனைக் கொடுப்பதாக அதன் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். அதைத்தவிர அமெரிக்காவின் மாடர்னா, ஃபைசர் மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் போன்ற நிறுவனத்தின் தடுப்பூசி மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையை எட்டி, தற்போது சந்தைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்ட்டியூட் ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்து விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்டு உள்ளது. இதனால் சீரம் மருந்து நிறுவனத்தின் வாயிலாக இந்தியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இறுதிக்கட்ட சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி சென்னையை சேர்ந்த ஒரு நபர் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனைக்கு ஒப்புக் கொண்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அந்த நபர் நவம்பர் 21 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி மருந்தை செலுத்திக் கொண்டதால் தனக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகக் கூறி அதற்கு நஷ்ட ஈடு கேட்டு சீரம் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டிஷ் அனுப்பி இருக்கிறார். அதில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல் 10 நாட்களில் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை. ஆனால் தொடர்ந்து கடுமையான தலைவலி, வாந்தி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. மேலும் அடிக்கடி சுயநினைவை இழக்கும் நிலைமையும் உருவாகி விட்டது. இதனால் சம்பந்தப்பட்டவருக்கு ரூ.5 கோடி நட்டத்தொகையை கொடுக்க வேண்டும்.
அதுவும் 2 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று அந்த நோட்டீஸ் மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்தியாவின் ஐசிஎம்ஆர், சீரம் இன்ஸ்டியூட் எனப் பல இடங்களுக்கும் இந்த நோட்டீஷ் வழிமொழியப்பட்டு இருந்தது. இந்தத் தகவலை கடந்த சில தினங்களுக்கு முன்பு நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாக வெளியிட்டும் இருந்தது. இந்த மனுவிற்கு பதில் அளித்த சீரம் மருந்து நிறுவனம் கோவிஷீல்ட் மருந்தினால் அவருக்கு எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை. அவர் உடல் நிலையில் இருக்கும் சிக்கலுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது அவருடைய மருத்துவப் பரிசோதனையில் தெளிவாகி விட்டது.
இருந்தும் நிறுவனத்தின் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து சிக்கலை வளர்த்து வருகிறார். இதனால் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி மருந்து மீது தவறான கருத்தைப் பரப்பியதற்காக அந்த நபரிடம் 100 கோடி நட்டத்தொகை கேட்டு வழக்கு தொடுக்க இருப்பதாக சீரம் நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments