கொரோனா தடுப்பூசிக்காக ஒவ்வொரு இந்தியனும் 2024 வரை காத்திருக்க வேண்டுமா??? அதிர்ச்சி தகவல்!
- IndiaGlitz, [Friday,November 20 2020]
கொரோனா தடுப்பூசிக்கான இறுதிக்கட்டத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அமெரிக்காவின் மார்டனா, ரஷ்யாவின் ஸ்புட்னிக் போன்ற சில மருந்துகள் மட்டுமே எட்டி இருக்கின்றன. இந்நிலையில் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசிக்கான 2 டோஸ் அளவு கிடைக்க வேண்டுமானால் அதற்கு 2024 வரை ஆகும் என சீரம் இன்ஸ்ட்டியூட் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்து உள்ளனார்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை தயாரித்து விற்பனை செய்ய இந்தியாவின் சீரம் மருந்து நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் சீரம் தயாரித்து விற்பனை செய்ய இருக்கும் கொரோனா தடுப்பூசி முதலில் இந்தியர்களுக்கு கிடைக்க வழிவகைச் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதை சீரமும் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை தயாரித்து கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு 2024 வரை நேரம் எடுத்துக்கொள்ளும் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்து உள்ளார்.
மேலும், ஆக்ஸ்போர்டு தயாரித்த கொரோனா தடுப்பூசி மற்ற தடுப்பூசிகளை விடவும் வயதானவர்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. ஆனால் இத்தடுப்பூசி நீண்ட நாட்களுக்கு நம்மை பாதிப்பில் இருந்து காப்பாற்றுமா என உறுதியாகக் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்து உள்ளார். முதற்கட்டமாக 100 மில்லியன் தடுப்பூசிகளை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கான இந்திய விலை 500-600 வரை நிர்ணயிக்கப்படலாம் எனவும் தெரிவித்தார்.
சீரம் நிறுவனம் பங்களாதேஷ் நாட்டிடம் மட்டுமே மருந்து தயாரித்து தர ஒப்பந்தம் செய்துள்ளது எனவும் வேறு எந்த நாட்டுடனும் ஒப்பந்தம் செய்ப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவிற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதில் சீரம் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். வரும் 2021 காலாண்டில் 300-400 டோஸ்கள் உருவாக்கப்படும். ஆனாலும் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் 2 டோஸ் அளவு கொடுக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு 2024 வரை காத்திருக்க வேண்டிவரும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.