சீரியல் காதல்....செழியனை காதலிக்கும் செம்பருத்தி...! கூடிய சீக்கிரம் டும் டும் டும்...!

  • IndiaGlitz, [Wednesday,May 12 2021]

செம்பருத்தி தொடரில் நடித்து வரும் கதாநாயகியான ஷபானா தனது காதலர் யார் என்று இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.

ஜீ தமிழ் என்ற தனியார் சேனலில், செம்பருத்தி என்ற சீரியல் கிட்டத்தட்ட 1000-எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதில் பார்வதியாக நடித்துவரும் ஷபானாவுக்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். அண்மையில் பேட்டி ஒன்றில் தனக்கு அடுத்த வருடம் திருமணம் என்றும், தன்னை கல்யாணம் செய்யவிருப்பவர் தாடி வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். தற்போது தன் காதலர் யார் என்று சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார் ஷபானா.

இதேபோல் தனியார் சேனலான விஜய் டிவியில், பாக்கியலட்சுமி என்ற தொடரில் செழியனாக நடித்து வருபவர் தான் நடிகர் ஆர்யன். இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

ரசிகர் ஒருவர் உங்களுக்கு ஜீ தமிழில் பிடித்த நாடகம் எது என கேட்க, ஆர்யன் ஜீ தமிழ் என்றாலே பிடிக்கும் என கூறியுள்ளார்.

மற்றொரு ரசிகர் உங்களுக்கு பிடித்த பூ என்று கேட்க, அதற்கு செம்பருத்தி என பதில் கூறியுள்ளார். மலையாளம் தெரியுமா என ரசிகர் கேட்க, கத்துக்கிட்டே இருக்கேன் என பதிலளித்துள்ளார்.

அதில் நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா..? என்ற ரசிகை ஒருவர் கேட்டிருந்தார். இதற்கு ஷபானவை குறிப்பிட்டு, ஆர்யன் இதற்கு நான் என்ன பதில் சொல்லட்டும் என பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் கூறிய ஷபானா அவர் என்னுடையவர் என்று பதிவிட்டுள்ளார். இதிலிருந்து இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.