எனக்கும் அரசியலுக்கு வர ஆசை இருக்கு.. விஜய்க்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாம்: பிரபல நடிகை..!

  • IndiaGlitz, [Monday,February 12 2024]

தமிழ் சீரியல் மற்றும் திரைப்பட நடிகை எனக்கும் அரசியலுக்கு வர ஆசை இருக்கிறது என்றும் அரசியலுக்கு வந்துள்ள விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் பேட்டி அளித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான ’தெய்வமகள்’ ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ’லட்சுமி வந்தாச்சு’ உள்பட ஒரு சில சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இவர் ’செங்களம்’ உள்பட ஒரு சில வெப் தொடர்களில் நடித்துள்ளார். மேலும் ‘ஓ மை கடவுளே’ ’பாயும் ஒளி நீ எனக்கு’ உட்பட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பதும் இவரது நடிப்பில் தற்போது மூன்று படங்கள் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த வாணி போஜன் ’விஜய் சார் அரசியலுக்கு வரட்டும், அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம், வாய்ப்பு கொடுத்தால் தான் அவர் என்ன செய்கிறார், அவருடைய நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்.

மேலும் ’செங்களம்’ என்ற வெப் தொடரில் நடிக்கும் போது எனக்கும் அரசியல் ஆசை இருந்தது, நானும் அரசியலுக்கு வரலாம் என்றும் அவர் கூறினார். விஜய் அரசியலை அவர் ஆதரிப்பதை பார்க்கும்போது அவர் விஜய் கட்சியில் இணைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

விஷ்ணு விஷால் குடும்பத்தில் இருந்து இன்னொரு நடிகர்.. ஜெமினி கணேசன் பாடல் தான் டைட்டில்..!

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷாலின் குடும்பத்தில் இருந்து இன்னொரு நடிகர் திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு

தாய்லாந்தில் கணவருடன் செம்ம ரொமான்ஸ்.. கிளாமரில் கலக்கும் கீர்த்தி பாண்டியன்..!

நடிகை கீர்த்தி பாண்டியன் கடந்தாண்டு நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது கணவருடன் தாய்லாந்து கடற்கரையில் ரொமான்ஸ் உடன் இருக்கும்

கேவி ஆனந்த் குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா குடும்பம்.. ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு..!

மறைந்த இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவான 'அயன்' 'மாற்றான்' மற்றும் 'காப்பான்' ஆகிய மூன்று படங்களில் சூர்யா நடித்துள்ளார் என்பதும் மூன்றுமே நல்ல வெற்றி படங்கள் என்பதும் தெரிந்ததே.  

ஒரு ஆம்லேட் 300 ரூபாய்.. சென்னையில் ஸ்டார் ஓட்டல் ஆரம்பித்த நடிகை சிம்ரன்..!

தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் , சூர்யா உட்பட பல முன்னணி பிரபலங்களுடன் நடித்தவர் நடிகை சிம்ரன். திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும்

படப்பிடிப்பே இப்பதான் தொடங்கியது.. அதற்குள் வேற லெவல் பிசினஸ்.. தனுஷின் 'DNS' படத்தின் மாஸ் தகவல்..!

தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானாலும் சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இ