திருமணமான ஒரே மாதத்தில் பிரிவா? பிரபல சீரியல் ஜோடி பற்றிய அதிர்ச்சி தகவல்!

  • IndiaGlitz, [Monday,May 08 2023]

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘சிப்பிக்குள் முத்து‘ சீரியல் பிரபலங்கள் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் காதல் ஜோடி சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்த நிலையில் ஒரே மாதத்தில் இருவரும் பிரிந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘ரஜினி’ ‘கோகுலத்தில் சீதை’ போன்று பல சீரியலில் நடித்து பிரபலமானவர் விஷ்ணுகாந்த். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘சிப்பிக்குள் முத்து’ எனும் தொலைக்காட்சி தொடரிலும் நடித்திருந்தார். அப்போது இவருடன் நடித்த பிரபல சீரியல் நடிகை சம்யுக்தாவை நீண்டநாட்களாகக் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் தங்களது நீண்டகால காதலை ரகசியமாக வைத்திருந்தது பின்னர் திருமணம் செய்துகொண்டதே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது திருமணம் ஆன ஒரே மாதத்தில் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாகத் தகவல்கள் கூறப்படுகிறது.

மேலும் இருவருமே தங்களது சமூகவலைத் தளப்பக்கங்களில் இருந்த திருமணப் புகைப்படங்களை அழித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும் விஷ்ணுகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘இந்த மௌனம் வெறுமையானதல்ல, உண்மை மற்றும் பதில் நிறைந்தது‘ என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.