கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான முறையில் அறிவித்த நடிகை: கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சீரியல் நடிகை ஒருவர் கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான முறையில் அறிவிப்பு செய்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் நடித்த அன்வர் மற்றும் சமீரா உண்மையான காதலர்கள் என்பதும் இதனை அடுத்து இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த தொடரை அடுத்து சமீரா ’ரெக்க கட்டி பறக்குது’ உள்பட ஒரு சில தொடர்களில் நடித்தார் என்பதும் அதேபோல் அன்பர் ஒரு சில தொடர்களை தயாரித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அன்வர் மற்றும் சமீரா கடந்த நவம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் இந்த திருமணத்திற்கு சின்னத்திரை உலகினர் பலர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது இந்த தம்பதியினர் நடத்திவரும் யூடியூப் சேனலில் ’நாங்கள் இனி கணவன் மனைவி இல்லை’ என்ற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தனர். இதனை அடுத்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளே போய் வீடியோவை பார்க்கும் போது நாங்கள் இனி கணவன் மனைவி இல்லை, இனி பெற்றோர்கள் என்று அறிவித்து தங்களுக்கு குழந்தை பிறக்க போவதை வித்தியாசமாக அறிவித்திருந்தனர். இதனை அடுத்து நெட்டிசன்கள் கர்ப்பத்தை அறிவிக்கும் முறை இதுதானா? என கழுவி ஊற்றி வருகின்றனர்
ஆனால் அதே நேரத்தில் சமீரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’நாங்கள் ஒரு குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்’ என்ற வாசகங்களுடன் கூடிய டிசர்ட் அணிந்த புகைப்படத்தை பதிவு செய்து, தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார் என்பதும் இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com