'எத்தனை பேருடா இப்படி கிளம்பியிருக்கிங்க'.. ரசிகரின் கேள்வியால் கடுப்பான சீரியல் நடிகை ரேஷ்மா!

  • IndiaGlitz, [Sunday,September 11 2022]

சீரியல் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தபோது ஒரு ரசிகர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா? என்ற கேள்வியை கேட்டதற்கு கடுப்பாகி, ‘எத்தனை பேருடா இப்படி கிளம்பியிருக்கிங்க.. என பதில் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’ஆபீஸ்’ உள்பட பல சீரியல்களில் நடித்தவர் நடிகர் மதன். இவர் சமீபத்தில் சீரியல் நடிகை ரேஷ்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்திற்கு சின்னத் திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் மதன் மற்றும் ரேஷ்மா ஆகிய இருவரும் தற்போது அபி டெய்லர் என்ற சீரியலில் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்த ரேஷ்மா, ஒரு ரசிகர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேட்டதால் கடுப்பானார். இந்த கேள்விக்கு அவர், ‘’எத்தனை பேருடா இப்படி கிளம்பியிருக்கிங்க.. நான் கர்ப்பமாக இல்லை’ என்று பதில் அளித்ததோடு ’கர்ப்பம் என்பதை ஸ்பெல்லிங் மிஸ்ட்டேக்கோடு கேட்டு உள்ளீர்கள்’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

More News

'கோப்ரா' நிலைமை தெரிந்தும் 3 மணி நேர படத்தை வெளியிடும் பிரபல இயக்குனர்: என்ன ஆகும்?

சமீபத்தில் வெளியான விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான 'கோப்ரா' திரைப்படம் மூன்று மணி நேரம் என்ற நீண்ட ரன்னிங் டைம் கொண்ட படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி

கேம் செயலி மூலம் நூதன மோசடி: கோடிக்கணக்கில் பணத்தை கைப்பற்றிய அமலாகத்துறை!

கேம் செயலி மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து ரூ.17 கோடி பணத்தை கைப்பற்றியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 

காடுன்னு ஒன்னு இருந்தா.. ராஜான்னு ஒருத்தரு தான இருக்க முடியும்: கமல்ஹாசனின் பிக்பாஸ் அறிவிப்பு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் 6வது சீசன் விரைவில் தொடங்கும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

நெருப்பு மட்டும் தான் வேற ஒண்ணை அழிச்சிட்டு தான் வாழும்: அதர்வாவின் 'ட்ரிகர்' டிரைலர்!

நடிகர் அதர்வா நடித்த அடுத்த திரைப்படமான 'ட்ரிகர்' திரைப்படம் செப்டம்பர் 23ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

கணீர் குரலில் செய்தி வாசித்த சன் டிவி பிரபலம் காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

சன் டிவியில் தனது கணீர் குரலால் செய்தி வாசித்த செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் சண்முகம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 52.