விஜய் மகனுக்கு ஜோடியா நடிக்கணும்: 17 வயது சீரியல் நடிகை பேட்டி!
- IndiaGlitz, [Friday,May 28 2021]
வளர்ந்து வரும் நடிகைகளாக இருந்தாலும் சரி, அறிமுகமாகும் நடிகைகள் ஆக இருந்தாலும் சரி விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று தான் கனவுடன் திரையுலகிற்கு வருவார்கள். ஆனால் சீரியல் நடிகை ஒருவர் தான் விஜய் மகனுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்
தளபதி விஜய் மகன் சஞ்சய் தற்போது கனடாவில் பிலிம் மேக்கிங் படிப்பை படித்து முடித்துள்ளார். இவர் இயக்குனராகவோ அல்லது நடிகராகவோ தமிழ் சினிமாவில் விரைவில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் டிவி உள்பட ஒருசில சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் பிரவீனா தாஹா என்பவர் தான் விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்
விஷ்ணு விஷால் நடித்த ’ராட்சசன்’ திரைப்படத்தில் அம்மு அபிராமியின் பள்ளி தோழியாக இவர் நடித்துள்ளார் என்பதும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 17 வயதே ஆன இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு சினிமாவில் நாயகியாக சாதிக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றும் குறிப்பாக விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அவருடைய ஆசை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.