பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை!
- IndiaGlitz, [Monday,June 28 2021]
வெள்ளித்திரை நடிகைகள் போல் சின்னத்திரை நடிகைகள் பொதுவாக பிகினி படங்களை வெளியிடுவதில்லை. ஓரளவு கிளாமரான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் தனது பிகினி புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எஸ்எஸ் மியூசிக் என்ற சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி அதன் பின்னர் ’காஞ்சனா’ உள்பட பல சீரியல்களில் நடித்தவர் நடிகை பூஜா ராமச்சந்திரன். இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எஸ்.எஸ்.மியூசிக் சேனலில் பணிபுரிந்த சக விஜே க்ரேயக் என்பவரை திருமணம் செய்து கொண்ட பூஜா ராமச்சந்திரன், அதன் பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகர் ஜான் கொக்கன் என்பவரை கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பூஜா ராமச்சந்திரன் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களும் கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.