எனக்கு தங்கை பிறந்திருக்கின்றார்: 19 வயது 'வாணி ராணி' சீரியல் நடிகை மகிழ்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
வாணி ராணி உள்ளிட்ட ஒரு சில சீரியல்களில் நடித்த சீரியல் நடிகை ஒருவர் தனக்கு தங்கை பிறந்திருப்பதாக வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ராதிகா நடித்த ’வாணி ராணி’ தொடரில் அவரது மகள்களில் ஒருவராக நடித்து இருந்தவர் தேனு என்ற நேஹா. இவர் ’பைரவி’ என்ற சீரியலில் அறிமுகமாகி அதன் பின் ’வாணி ராணி’ ’பிள்ளைநிலா’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். சிபிராஜ் நடித்த ’ஜாக்சன் துரை’ என்ற படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவருக்கு தற்போது 19 வயது ஆகியிருக்கும் நிலையில் தனது அம்மா கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் குழந்தை பிறக்கும் என்றும் தனக்கு ஒரு தங்கை பிறக்க போகிறார் என்றும் கடந்த சில வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில் தனது அம்மாவுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும், எனக்கு ஒரு அன்பு தங்கை பிறந்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைவரும் தனது தங்கைக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்றும் உங்களது அனைவரது ஆசிர்வாதமும் அவருக்கு தேவை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் சர்ச்சைக்குரிய கமெண்ட்ஸ்களை பதிவு செய்திருந்த நிலையில், ‘இது போன்ற குப்பை கமெண்ட்ஸ்கள் குறித்து நான் கவலைப்படப் போவதில்லை, எனவே இங்கே வந்து உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்’ என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.
#PandiyanStores fame Neha's mother gives birth to a girl child . . ?????? pic.twitter.com/XlXTuiqguY
— Anbu (@Mysteri13472103) March 23, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com