திடீரென நின்று போன திருமணம்.. 50 சவரன் நகைகளை கொடுத்து ஏமாந்த சீரியல் நடிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல சீரியல் நடிகைக்கு சிங்கப்பூரை சேர்ந்த பைலட் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென திருமணம் நின்று போய்விட்டதாகவும், மாப்பிள்ளை வீட்டாரிடம் 50 சவரன் நகை கொடுத்து, அந்த நடிகை ஏமாந்துவிட்டதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
’வாணி ராணி’ உள்பட சில சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ஜெனிபிரியா. இவருக்கும் சிங்கப்பூரை சேர்ந்த பைலட் துநேசன் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, நலங்கு நிகழ்ச்சியும் நடந்தது. துநேசன் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்றும், அவருக்கு இரண்டு குழந்தைகளும் இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், அதை தெரிந்து கொண்டே ஜெனிபிரியா திருமணத்துக்கு சம்மதித்தார்.
மேலும், பெண் வீட்டார் திருமணத்திற்கு 200 சவரன் நகை வரதட்சனை கேட்ட நிலையில், 100 சவரன் போடுகிறேன்" என்று ஜெனிபிரியா வீட்டினர் கூறியுள்ளனர். சமீபத்தில் சென்னை வந்த துநேசன் குடும்பத்தினர், "100 சவரன் நகைகளை கொடுங்கள்; நாங்கள் இப்போதே சிங்கப்பூருக்கு கொண்டு செல்கிறோம். திருமண நேரத்தில் கொண்டு வந்தால் கஸ்டம்ஸ் பிரச்சனை வரும்," என்று கூறியதாக தெரிகிறது. இதை நம்பிய ஜெனிபிரியா 50 பவுன் நகைகளை மட்டும் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் தான் துநேசன் குடும்பத்தினர் நடவடிக்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒருமுறை சிங்கப்பூருக்கு வரவழைத்து, ஜெனிபிரியாவின் பொருள்களை எல்லாம் திருப்பிக் கொடுத்து அனுப்பிவிட்டதாகவும், நகைகளை கேட்டதற்கு "நீ நகைகளை எதுவும் கொடுக்கவில்லை" என்று கூறியதுதான் ஜெனிபிரியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னை திரும்பிய ஜெனிபிரியா சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருவதாகவும், வழக்கறிஞரிடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும், அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com