நான் சாகவில்லை, உயிரோடுதான் இருக்கிறேன்.. சீரியல் நடிகையின் ஆதங்க வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நான் இறந்து விட்டதாக ஒரு சிலர் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர் என்றும் நான் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் என்றும் தயவுசெய்து இது மாதிரி தவறான வீடியோக்களை பதிவு செய்ய வேண்டாம் என்றும் சீரியல் நடிகை கல்யாணி ரோஹித் தெரிவித்துள்ளார்.
’ஜெயம்’ என்ற திரைப்படத்தில் நாயகி சதா தங்கையாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் கல்யாணி . இவர் ‘அள்ளித்தந்த வானம்’, ‘ஸ்ரீ’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னால் தனது உடல்நிலை குறித்து வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார்.
2016 ஆம் ஆண்டு தனக்கு முதுகு தண்டுவடத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும் அதன் பிறகு நான் நன்றாக இருந்தேன் என்றும் ஆனால் தற்போது அறுவை சிகிச்சை செய்த அதே இடத்தில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார். ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த இடத்தில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர் கூறி இருக்கிறார் என்று அந்த அறிவுரையின்படி மீண்டும் அறுவை சிகிச்சை செய்து தற்போது நலமாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்த காலகட்டத்தில் நான் மிகவும் மன உளைச்சலுடன் இருந்தேன் என்றும் குழந்தை மற்றும் கணவரை கவனிக்க வேண்டியது ஒரு பக்கம் இன்னொரு பக்கம் உடல் உபாதையால் அவதிப்பட்டேன் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் இந்த வீடியோவை பார்த்து ஒரு சிலர் கல்யாணி ரோகித் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர் இறந்து விட்டதாகவும் சிலர் பொய்யான தகவல்களை கூறி வீடியோக்களை பதிவு செய்தனர்.
இதனை அடுத்து அவர் மீண்டும் ஒரு வீடியோ ஒரு பதிவு செய்துள்ளார். அதில், ‘இறந்த உடலில் என்னுடைய முகத்தை மார்பிங் செய்து தவறான செய்திகளை பதிவு செய்து வருகிறார்கள். நான் உடல் நலம் இல்லாத போது மன ரீதியில் சந்தித்த பிரச்சனை குறித்து தான் பேசினேன். ஆனால் என்னை பற்றி தவறான வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். தயவு செய்து இது போன்ற வீடியோக்களை வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com