2 தடவை அபார்ஷன் ஆகிருச்சு.. 42 வயதில் கர்ப்பமானேன்.. நெகிழ்ச்சியுடன் சின்னத்திரை நடிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சின்னத்திரை நடிகை ஜூலி தான் இரண்டு முறை கர்ப்பமாகி அபார்ஷன் செய்ததாகவும் இந்த முறை 42 வது வயதில் கர்ப்பமாக இருப்பதாகவும் எங்கள் குழந்தையை நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரபல சின்னத்திரை நடிகை ஜூலி பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பதும் அவரது கணவர் மணிகண்டன் என்பவரும் மீடியா துறையில் தான் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருமணம் ஆகி இரண்டு முறை கர்ப்பமானதாகவும் ஆனால் இரண்டு முறையும் அபார்ஷன் ஆகிவிட்டதை அடுத்து 10 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாமல் மிகுந்த மனக்கஷ்டத்தில் இருந்ததாகவும் கூறிய ஜூலி தற்போது தான் 42 வயதில் கர்ப்பமாகி இருப்பதாகவும் சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்ததில் தனக்கு மிகுந்த சந்தோஷம் என்றும் தெரிவித்தார்.
குழந்தை இல்லாததால் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாகி இருந்ததாகவும், எங்கு போனாலும் இன்னும் குழந்தை என்ற இல்லையா என்ற கேள்வி, வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்லும் போதெல்லாம் நமக்கும் இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடக்காதா என்ற ஏக்கம் தனக்கு இருந்ததாகவும் தற்போது தான் மிகுந்த மன மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது கணவரின் நண்பர்கள் எல்லாம் குழந்தைகளுடன் இருக்கும் போது அவர் தனியாக இருப்பதை பார்த்து எனக்கு வருத்தமாக இருந்தது என்றும் அவருக்காகவே ஒரு குழந்தைக்கு பெற்று கொடுக்க வேண்டும் என்று ஆசையாக இருந்ததாகவும் அது தற்போது நிறைவேறி இருப்பதாகவும் கூறினார்.
தற்போது கூட ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் அந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறிய ஜூலி, விரைவில் நாங்களே ஒரு படத்தை இயக்க இருக்கிறோம் என்றும் கதை எல்லாம் தயாராகிவிட்டது என்றும் விரைவில் எனது கணவர் மணிகண்டனை ஒரு இயக்குனராக நீங்கள் பார்க்கலாம் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
42 வயதில் கர்ப்பமாகி உள்ளதை எடுத்து அவர் நல்ல முறையில் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout